×

மெக்ஸிக்கோவை தாக்கும் சூறாவளி 'வில்லா': 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எச்சரிக்கை

மெக்ஸிக்கோ: மெக்ஸிக்கோவில் பசிபிக் கடற்கரையை நோக்கி வில்லா எனும் சக்திவாய்ந்த சூறாவளி 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியானது இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. புயல், காற்று மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றால் தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய மெக்ஸிக்கோ பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மூலம் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அதிகமான உயரத்தில் அலைகள் எழும்பும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியால் ஆபத்தில் உள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி கிராமங்கள், ரிசார்ட் ஹோட்டல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருப்பதால் பாதுகாப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடலோரப் பகுதிககளில் உள்ள நகரங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சூறாவளி காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hurricane 'Villa ,Mexico , Hurricane,willa,hit,Mexico,warning,155-mile,high speed,wind,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...