×

111 ஆறுகளை நீர்வழிகளாக மாற்ற முடிவு: 12 ஆறுகளில் பணிகள் தொடக்கம்...மத்தியமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: நாடுமுழுவதும் 111 ஆறுகளை நீர்வழிகளாக மாற்ற முடிவு செய்திருப்பதாகவும் 12 ஆறுகளில் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கங்கையில் வாரணாசி முதல் ஹல்டியா வரை நீர்வழித்தடம் அமைக்கும் முதல் நீர்வழி திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சரக்குப் போக்குவரத்திற்கான செலவு குறைக்கப்படாமல், ஏற்றுமதியை அதிகரிக்க முடியாது என்றும் கடல் விமானப் போக்குவரத்துக்கான ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கான அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் இறக்குமதி 26 சதவீதமாகவும் ஏற்றுமதி 8 சதவீதமாகவும் இருப்பதால், ஏற்றுமதி-இறக்குமதி இடையேயான வேறுபாடு பொருளாதாரத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rivers ,waterways ,Nitin Gadkari , River, waterway, central minister Nitin Gadkari, info
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி