×

மணல் கடத்தல் வழக்குகள் எத்தனை? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான வெள்ளாற்றில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடக்கிறது. அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி சிலர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் திருட்டு அன்றாட நடவடிக்கையை போல மாறிவிட்டது. எனவே, மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மணல் திருட்டில் ஈடுபட்டு பிடிபடும் வாகனங்களை வருவாய்த்துறையினர் விடுவிக்க கூடாது. மாட்டுவண்டி பிடிபட்டால் மாட்டை மட்டும் விடுவிக்கலாம். வண்டியை விடுவிக்க கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது நீதிபதிகள், மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? வெளிநாட்டு இறக்குமதி குறித்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் வரை செல்கிறது என கருத்து கூறிய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jury ,government , Sand smuggling, government, jordan branch
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...