×

தியோதர் டிராபி: டெல்லியில் இன்று தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா ஏ, பி, சி அணிகள் மோதும் தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 3 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 27ம் தேதி இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இந்தியா ஏ அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா பி அணி ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலும், இந்தியா சி அணி அஜிங்க்யா ரகானே தலைமையிலும் களமிறங்க உள்ளன.இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகள் மோதுகின்றன. நாளை இந்தியா பி - இந்தியா சி அணிகளும், நாளை மறுநாள் இந்தியா ஏ - இந்தியா சி அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் நெருங்கி வரும் நிலையில், அனுபவ வீரர்கள் அஷ்வின், கார்த்திக், ரகானே, ரெய்னா போன்றவர்கள் தேர்வுக் குழுவினரின் கவனத்தைக் கவர இந்த தொடரை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஏ: தினேஷ் கார்த்திக் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), பிரித்வி ஷா, அன்மோல்பிரீத் சிங், அபிமன்யு ஈஸ்வரன், அங்கித் பாவ்னே, நிதிஷ் ராணா, கருண் நாயர், குருணல் பாண்டியா, ஆர்.அஷ்வின், ஷ்ரேயாஸ் கோபால், ஷாம்ஸ் முலானி, முகமது சிராஜ், தவால் குல்கர்னி, சித்தார்த் கவுல்.இந்தியா பி: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மயாங்க் அகர்வால், ரித்துராஜ் கெயிக்வாட், பிரஷாந்த் சோப்ரா, ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி, அங்குஷ் பெய்ன்ஸ் (விக்கெட் கீப்பர்), ரோகித் ராயுடு, கே.கவுதம், மயாங்க் மார்கண்டே, ஷாபாஸ் நதீம், தீபக் சாஹர், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனத்காட். இந்தியா சி: அஜிங்க்யா ரகானே (கேப்டன்), அபினவ் முகுந்த், ஷுப்மான் கில், ரவிகுமார் சமர்த், சுரேஷ் ரெய்னா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், பப்பு ரே, நவ்தீப் சாய்னி, ரஜ்னீஷ் குர்பானி, உமர் நசீர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi , Theodore,Trophy,Start Today,Delhi
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!