×

மழைநீர் புகுந்த விவகாரம்.. 22 பஸ் பணிமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: எஸ்இடிசி இயக்குனரகம் உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள, 22 பஸ் பணிமனைகளில் மழை  நீர் நுழைவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சூழல் நிலவி வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பரவலாக,  மழை பெய்து வருகிறது. விருதுநகரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த, 10 ஆயிரம் லிட்டர் டீசல் வீணாகியது.

இதுகுறித்து விரைவுபோக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, நாகர்கோவில், கோவை, சேலம் என, 22 இடங்களில் அரசு விரைவுபோக்குவரத்துக்கழகத்திற்கான பணிமனைகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால், அங்கு மழைநீர் புகுந்து விடாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தாழ்வான இடங்களில் இருக்கும் பணிமனைகளில் மழை நீர் உள்ளே செல்லாமல் தடுத்து, மாற்று வழியில் திருப்பி விடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும், ஊழியர்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus workshops ,SEC Directorate , Preliminary action,bus,workshops,SETC,Directorate,ordered
× RELATED சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி...