×

தாமிரபரணி மகா புஷ்கர விழா பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு : நிரம்பி வழியும் விடுதிகள்

திருநெல்வேலி : திருநெல்வேலி தாமிரபரணி புஷ்கர விழாவில் பங்கேற்கவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. கடைகளிலும் வியாபாரம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை போற்றும் விதமாக 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா புஷ்கர விழா தற்போது நடைபெற்று வருகிறது.

 தாமிரபரணியில் நீராட வெளி மாவட்டங்கள் மட்டும் இன்றி அந்தரா, கர்நாடகா, மஹாராஸ்தா, குஜராத் மேற்கு வங்க மக்கள் வந்து செல்கிறார்கள். இதுவரை சுமார் 20 லட்சம் பேர் நீராடி சென்றிருக்கிறார்கள். புஷ்கர விழாவால், விழா கோலம் கொண்டுள்ளது நெல்லை மாவட்டம். தற்போது தொடர் விடுமுறையால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

அதனால் நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பே அறைகள் முன் பதிவு முடிந்து விட்டதாக கூறுகிறார்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள். மகா புஷ்கர விழாவில் நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் ஹோட்டல்கள் அலை மோதுகிறது. நெல்லையின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படும் இருட்டு கடையில் நீண்ட வரிசையில் நின்று ஹல்வா வாங்கி செல்கிறார்கள். மக்களின் அதிக வருகையால் வியாபாரம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள் வியாபாரிகள்.        



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ceremony ,Tampirabani Maha Pushkara ,hotels ,pilgrims , Tirunelveli, Thamiraparani, Pushkara ceremony, devotee, count
× RELATED அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா