×
Saravana Stores

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி (93) உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். 1925 அக்., 18 ல் பிறந்த நாராயணன் தத் திவாரி, டெல்லியில் உள்ள சாக்கேட் மருத்துவமயைில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிறந்தநாளான இன்று(18 அக்., 2018) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2002 முதல் 2007 வரை முதல்வராக பதவி வகித்தார்.  உத்தராகண்ட் மாநிலத்தில் 1986-87 வரை முதல்வராக பதவி வகித்துள்ளார். மேலும் அமைச்சர் பதவி மற்றும் ஆந்திர பிரதேச ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். இவர் இரண்டு மாநிலங்களில் முதல்வராக பதவி வகித்துள்ள பெருமைக்குரியவர்.

1986 -87 ல் ராஜிவ் அமைச்சரவையில், வெளியுறவு, 2007 - 2009 ல் ஆந்திர கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். ஆரம்பத்தில் பிரஜா சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், 1963 ல் காங்கிரசில் இணைந்தார். பின்னர் 1995- ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி துவக்கி நடத்தினார். ஆனால், 2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ND Tiwari ,Congress ,Delhi , ND Tiwari, Former Uttarakhand Chief Minister, Dies ,93rd Birthday
× RELATED உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு