×

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அபராதம் இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்: ராமதாஸ், வைகோ கடும் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும், ₹60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை இந்தியா இன்னும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வரும் மத்திய பாஜ அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை அரசால் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறச் செய்து, விடுதலை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,Indian ,fishermen ,Vaiko ,Ramadoss , Sri Lankan,Indian fishermen,attack,Indian sovereignty,Ramadoss, Vaiko condemned
× RELATED கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்...