×

நீடாமங்கலம்-வையகளத்தூர் இடையே தண்டவாளத்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தனியார் அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி, 2 மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு  உயர்நிலைப்பள்ளி, 2 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஒரு தனியார் அரசு  உதவிபெறும் தொடக்கப்பள்ளி, ஒரு தனியார் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள்  உள்ளன. நீடாமங்கலம் மட்டுமின்றி   வையளத்தூர், ஒளிமதி, கிளரியம், அன்பிற்குடையான், அரவூர், கப்பலுடையான், மாணிக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு  ஊர்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் இப்பள்ளிகளில் படிக்கின்றனர்.   இதற்காக  வையகளத்தூரிலிருந்து பழைய நீடாமங்கலம் வழியாக பள்ளிகளுக்கு செல்ல  வெண்ணாற்றில் உள்ள ஆபத்தான ரயில்வே பாலம் வழியாக மாணவ, மாணவிகள்  செல்கின்றனர்.  சைக்கிளில் வருவோர் தள்ளிக்கொண்டும்  மற்றவர்கள் நடந்தும் தண்டவாளத்தில் செல்கின்றனர்.

மாணவ, மாணவிகள்  பள்ளிக்கு வரும் நேரம் காலை 8.30லிருந்து 9 மணிவரையாகும். அந்த நேரத்தில்  திருச்சியிலிருந்து நாகூருக்கும், நாகூரிலிருந்து திருச்சிக்கும்,  மாலை   4,30க்கு,   நாகூரிலிருந்து திருச்சிக்கும் பயணிகள் ரயில் தினம்தோறும்  வந்து செல்கிறது. இதனால் ரயில் எப்போது வருமோ என  மாணவ மாணவிகள் உயிரை  கையில் பிடித்துக்கொண்டு தண்டவாளத்தை ஓடி கடந்து செல்கின்றனர். இதுகுறித்து  மத்திய மாநில அரசுகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை.  பழைய நீடாமங்கலம்-வையகளத்தூர் இடையே பாலம் அமைத்தால்  நீடாமங்கலத்தில் நாள் ஒன்றுக்கு 18 தடவை மூடப்படும் ரயிவே கேட்டால்  ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். பாலம் அமைத்தால் நாகை செல்லும்  பெரும்பாலான வாகனங்கள் நீடாமங்கலம் பெரியார் சிலை வழியாக சென்று விடும்.

ரயில்வே கேட் மூடுட் நேரத்தில் இதே வழியாக வாகனங்கள் சென்று வையகளத்தூரில்  உள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக  கும்பகோணம் எளிதாக சென்று விடும்.  இதனால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்.  எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  மாணவ மாணவிகள்  மற்றும் பொது மக்கள் நலன் கருதி பழைய நீடாமங்கலம்- வையகளத்தூருக்கு  வெண்ணாற்றில் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Student students ,Neemamangalam-Vayalakathur , Student students traveling on the train between Neemamangalam-Vayalakathur
× RELATED கோவையில் தினகரன் கல்வி கண்காட்சி...