×

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் செயல்பட்டு வரும் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தின் புதிய தலைவராக தேர்வாகியுள்ள முன்னாள் அமைச்சர் எம்.பி காளியப்பன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைப்பெற்றது.

அதில் அமைச்சர் செங்கோட்டையன், கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்பட்ட தவறை கண்டறியப்பட்டதால், கடந்த மூன்று மாதங்களாக தள்ளி போன தேர்வை, இனி வரும் காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நிகழாத வகையில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும், விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார். மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், மாணவ, மாணவிகளின் நடத்தை குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவே QR எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Minister Chengottiyan , Teacher Eligibility Testing, Minister Sengottaiyan, Smart Card
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...