×

ஒரு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

சென்னை: அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சார்ந்தவர் தன்ராஜ் (28). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு, தன்ராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையிடம் பாலியல் ரீதியாக ஏதோ செய்து கொண்டு இருந்தார். சத்தம் கேட்டு எழுந்த கல்பனா, குழந்தைக்கு கணவன் தன்ராஜ், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அவரை கண்டித்து குழந்தையை மீட்டார். பின்னர் நேற்று காலை தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுது புலம்பி உள்ளார்.

 அவர்களது ஆலோசனையின் பேரில் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் நித்தியகுமாரி வழக்கு பதிவு செய்து தன்ராஜை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தைக்கு, தன்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பேக்சோ சட்டத்தில் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Boccas , For,adult child,Sexual harassmentimprisonment father of the pokso law
× RELATED போக்சோ சட்டத்தில் அண்ணன், தம்பி கைது