×

மராட்டிய மாநிலத்தில் மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய திட்டம் இல்லை : தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்துகள் நடக்கின்றன. எனவே மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்லைனில் மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இத்தகவலை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார். முன்னதாக இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த அம்மாநில கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, வீடுகளுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மகாராஷ்டிர மாநிலம் முழுதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இது தவறான மற்றும் மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்றும், சட்டவிரோத மதுபான நுகர்வுக்கு வழிவகுத்துவிடும் என்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மதுபானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை தற்போதைக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் எதிர்காலத்திலும் கொண்டுவரப்படாது என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Devendra Bhadnavis ,Maharashtra , Drinks, Door Delivery, Maharashtra State
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!