×

வியாசர்பாடி எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ரவுடி சாவு

* உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
* அடித்துக்கொன்றதாக குற்றச்சாட்டு
சென்னை: சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் விசாரணையின்போது பிரபல ரவுடி இறந்தார். இதையறிந்து அவரது உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.   வியாசர்பாடி, பி.வி காலனி, 2வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (27). பிரபல ரவுடி. கார்த்திக் மீது எம்கேபி நகர், சோழவரம், செங்குன்றம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை  முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஓராண்டுக்கு முன்பு சோழவரத்தில் சாலமன் என்பவரை வெட்டிக் கொன்ற வழக்கிலும் கார்த்திக் முக்கிய குற்றவாளி. இந்த வழக்குகளில் ஜாமீனில் வெளியில் வந்த கார்த்திக் பின்னர்  தலைமறைவானார். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையிலும் எம்கேபி நகர் பகுதியில் முக்கிய தொழிலதிபர்களை மிரட்டி கார்த்திக் பணம் பறித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சாஸ்திரி நகரில்  சாலையில் நிறுத்தி இருந்த வாகனங்களை சூறையாடிய விவகாரத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதாகவும்  கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் தனது கூட்டாளிகளுடன் அண்ணா  நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சென்று கார்த்திக், அருண்பாண்டியன் (27), ராஜ்குமார் (26) ஆகியோர்  மூவரையும், மடக்கி பிடித்து எம்கேபி நகர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில், கார்த்திக் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். போலீசார் அவரை மீட்டு அதேப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே கார்த்திக் இறந்துவிட்டதாக கூறினர். உடனே போலீசார் அவரது சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் பிரபல ரவுடி இறந்த தகவல் வியாசர்பாடி பகுதியில் பரவியதால், பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதை அறிந்த கார்த்திக்கின் உறவினர்கள் எம்கேபி நகர் காவல்  நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்திக்கை அடித்து கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டினர். அவர்களிடம் போலீசார், அவர் உடல் நலக்குறைவால்  இறந்ததாக கூறி அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rowdy ,death ,Emppi Nagar ,police station ,Vyasarpadi , Rowdy's death, Emppi Nagar police,station ,Vyasarpadi
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...