×

பெரம்பலூரில் டெங்கு கொசு உற்பத்தியா? கலெக்டர் வீடு வீடாக சோதனை

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா இன்று காலை பெரம்பலூர் நகரில் வீதி வீதியாக சென்று டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகைள் மேற்கொண்டார். ரெங்காநகர் பகுதியில் அவர் வீடு வீடாக சென்று  அங்குள்ள குடிநீர் தொட்டி, மற்றும் பெரிய அண்டாக்கள், பேரல்களில் பிடித்து வைத்துள்ள குடிநீரையும் பார்த்தார்.குடிநீரை திறந்த நிலையில் வைத்திருந்தால் டெங்கு கொசு உற்பத்தியாகும். எனவே சுத்தமான குடிநீர் மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பெரும்பாலான வீடுகளில் டெங்கு கொசு பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருந்ததை கண்டறிந்த கலெக்டர் சாந்தா, குடிநீரை மூடி வைப்பதுடன், சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பாதுகாத்து சுகாதாரத்தை பேணும்படி வலியுறுத்தினார். கலெக்டருடன்  ஆர்டிஓ விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perambalur Collector , Perambalur, dengue mosquito, collector, house, test
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...