×

மணல் கடத்தலுக்கு அரசு அதிகாரி உடந்தை என புகார் : வருவாய் வட்டாட்சியர் சிறைபிடிப்பு

திருச்சி: திருச்சி அருகே மணல் கடத்தலுக்கு உடைந்தையாக செயல்படுவதாக வட்டாட்சியர் ரேணுகா தேவி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக பலமுறை புகார் தெரிவித்த போதும் வருவாய் கோட்டாட்சியர் ரேணுகாதேவி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு மணல் அல்லும் இடத்தில் இருந்த வருவாய் வட்டாட்சியரை பொதுமக்கள் காருடன் சிறைபிடித்தனர். பொதுமக்களிடம் சிக்கிய லாரி உரிமையாளர் நந்தகுமார், வட்டரசியர் 3 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகட்டி தருவதாகவும் அவர் அழைத்ததன் பேரிலேயே மணல் அல்ல வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வருவாய் வட்டாட்சியர் மறுத்துவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வருவாய் வட்டாட்சியரை விடுவித்தனர். பின்னர் மணல் கடத்தியதாக லாரி ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளரை கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy, sand, tehsil, spanking
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...