×

பாலக்கோடு அருகே 3,500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பி.கொல்லஅள்ளி கிராமத்தின் மேற்கு திசையில், சுமார் 2கிலோ மீட்டர் தொலைவில் முத்தத்ராயன் குன்று அமைந்துள்ளது. இந்த குன்று சுமார் 500 அடி உயரமுள்ளது. இதன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாறை குகை வாழிடத்தில் பெருங்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உள்ளது. இந்த பாறை ஓவியங்களை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான வரலாற்று மாணவர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:
இந்த குன்றின் குகை, அதை ஒட்டிய பாறைச்சுவர் என இரண்டு இடங்களில் ஓவியத்தொகுதிகள் காணப்படுகின்றன. குகையில் சுமார் 50 பேர் வரை தங்க முடியும். இக்குகையின் மேற்புற பாறையில் மனித உருவம் வரையப்பட்டுள்ளது.

அதன் அருகே நான்கு கால்கள் கொண்ட வட்டம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் காவி கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இத்தகைய ஓவியம் கீழ்வாலை எனுமிடத்தில் உள்ளது. கீழ்வாலை ஓவியங்களின் காலம் சுமார் 3500 ஆண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளதால், இந்த ஓவியத்தின் காலமும் 3500 ஆண்டுகள் என மதிப்பிடலாம். காவி கலந்த வெள்ளை நிற ஓவியத்தின் காலம் 5 ஆயிரம் ஆண்டுகள் வரை கருதலாம். இத்தகைய ஓவியம் சிந்துவெளி நாகரிகத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. எனவே, இந்த ஓவியத்தின் காலம் கொத்தகொட்டமலை ஓவியங்களை விட காலத்தால் முந்தையதாக கருதப்படுகிறது. இங்கு வரையப்பட்டுள்ள கூரை வீடுகள் போன்ற ஓவியங்கள், இவர்களின் குடியிருப்பு இங்கிருந்ததை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balakode , Palakkodu, rock painting, innovation
× RELATED முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்