×

ரூ6 ஆயிரம் கோடி செலவில் முக்கொம்பு கதவணை, அத்திக்கடவு அவினாசி திட்டங்களை 2 ஆண்டில் முடிக்க வேண்டும்

* சேர்மன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சென்னை: முக்கொம்பு கதவணை உள்ளிட்ட பல பணிகள் 2 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் முடிக்க சேர்மன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கழகத்தில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாநில நீர்வள மேலாண்மை முகமை இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்தின் தற்காலிக தலைவராக விபு நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கழகம் அமைத்ததற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள், அரசு செயலாளர் பிரபாகரிடம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்தின் தலைவர் விபு நய்யார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில்  நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம், திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு தலை பொறியாளர் செல்வராஜூ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், இந்த கழகத்தின் மூலம் என்ன பணிகள் செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, ரூ.400 கோடி செலவில் முக்ெகாம்பு கதவணை கட்டுவது, அத்திகடவு அவினாசி நதிகள் இணைப்பு திட்டம், ரூ.550 கோடி செலவில் நடைபெறவுள்ள அடையாற்று சீரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை இக்கழகத்தின் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும பணிகளுக்கான நிதியை மத்திய அரசு, நபார்டு வங்கி, உலக வங்கிகளிடம் பெறும் வகையில், அதற்கான திட்ட அறிக்கையை விரைந்து தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கழகத்தின் மூலம் 2 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் திட்டப்பணிகள் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ரூ6 ஆயிரம் கோடி செலவில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muthuku Kathavana ,Atakaduwa Avinashi , Mucus, catwalk, anthacavu, avinashi
× RELATED தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர்...