×

முதல்வர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு கூட்டணி தலைவர்களுடன் பாரிக்கர் நாளை ஆலோசனை

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கூட்டணிக் கட்சி தலைவர்களை நாளை சந்தித்து பேச உள்ளார்.கோவா முதல்வராக பாஜ.வை சேர்ந்த மனோகர் பாரிக்கர் (62) உள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலன் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் பெற்ற சிகிச்சையை தொடர்ந்து தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அரசு செயல்படாமல் முடங்கி கிடப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.  உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர், முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு சில கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், பாரிக்கர் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை பாரிக்கர் நாளை சந்தித்து பேச உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parrikar ,leaders ,office ,opposition coalition , Resistance, Chief Minister ,Parrikar w, advised tomorrow
× RELATED ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு...