×

தமிழில் தேர்வு எழுத அனுமதி கேட்ட பல்கலை. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா?: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் கட்டண குறைப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தமிழில் தேர்வு எழுதும் கோரிக்கையை பல்கலைக்கழகம் நிராகரித்தது. இந்நிலையில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வளாகத்திற்குள் செல்ல முயற்சித்த போது, காவல்துறையினர் திடீரென அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. மாணவிகள் என்று கூட பார்க்காமல் ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய மாணவர் சங்க மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லமால் 10 மாணவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்துள்ளது. காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத அத்துமீறல் நடவடிக்கை கண்டிக்கதக்கது.

தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளையும், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். காயமுற்ற மாணவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும். எவ்வித முன்னறிவுப்புமின்றி தாக்குதல் நடத்திய போலீசார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : university ,K.Balakrishnan , Seeking permission,write exam,Tamil University,attack students,K.Balakrishnan condemned
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா