×

குட்கா முறைகேடு வழக்கு விசாரணை தீவிரம் மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் நடந்து ள்ள குட்கா ஊழல் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. அது, கடந்த மாதம் 40கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து. குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சிவகுமார், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்தது.  அவர்களை வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க  நீதிபதி உத்தரவிட்டார்.

இதில்,  மாதவராவ், உமா சங்கர் குப்தா,  சீனிவாசராவ் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில்  குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வெளியில் சென்று சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என அறிக்கை தாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை அக்டோபர் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gudkai ,malpractice case trial court ,Madhav Rao , Gudka fraud, trial, Madhavrao, bail plea, adjournment
× RELATED குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட...