×

நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் கணக்கை தணிக்கை செய்யுங்கள்: ஆடிட்டர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

புதுடெல்லி: ‘‘கணக்கு தணிக்கையை பயன் தரக்கூடிய வகையில் செய்ய வேண்டும்’’ என தலைமை கணக்கு அதிகாரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை கூறியுள்ளார்.இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கணக்கு தணிக்கை பணி என்பது அரசை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. எனவே, சிறந்த உற்பத்தி தரும் மதிப்பீடுகளை செய்வதை விட, நீங்கள் பயன் தரக்கூடிய கணக்கு தணிக்கையை மேற்கொள்வது அவசியம். நீங்கள் நாட்டின் கணக்குகளை வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல. தேசத்தின் வளர்ச்சிக்கான மனச்சாட்சியை கொண்டவர்கள். கணக்குகளை தணிக்கை செய்யும்போது தகவல்கள் அடிப்படையிலான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். கணக்கு தணிக்கையாளர்களின் பணி வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதுடன், நல்ல நிர்வாகத்தை தருவதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,President ,auditors , Censor,account to benefit,country,President's advice to the auditors
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...