×
Saravana Stores

ஊட்டி நொண்டிமேடு பகுதியில் சிறுத்தையை கண்காணிக்க கேமரா

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, குந்தா, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை,  காட்டெருமை மற்றும் கரடி ஆகிய வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புகளுக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள நொண்டிமேடு குடியிருப்பு பகுதியில் புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை  ஆடு ஒன்றினை தூக்கிச் செல்லும் காட்சியை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகினர். மேலும்,  வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். எனினும், சிறுத்தை அப்பகுதியிலேயே உலா வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் கொண்டு சென்று விட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நொண்டிமேடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து உள்ளதா என்பதை உறுதி செய்ய தற்போது நீலகிரி வனக்கோட்டம் சார்பில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது உறுதி செய்யப்பட்டால், அதனை பிடிக்கும்  நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lime area , ooty, leopard, camera
× RELATED பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!