×

வங்கக்கடலில் 'டிட்லி'புயல் : ஒடிசாவின் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் 2 நாட்களுக்கு மூடல்

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. புதிய புயலுக்கு இந்திய வானிலை மையம் டிட்லி என்று பெயர் சூட்டியுள்ளது. டிட்லி என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் நேற்று தெரிவித்தது. ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் உள்ள கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்றும், நாளையும் மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது விடுமுறை அளிப்பது என்றும், மற்ற பகுதிகளுக்கு நிலைமை ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யலாம் எனவும் அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. புயல் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க ஒடிசா அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : School colleges ,Bengaluru ,districts ,Odisha , 'Titli' storm, Bay of Bengal, School colleges closed, Orissa
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்