×

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து கிறிஸ்தவ மதபோதகர் எப்போது பேசினார்?: விவரம் தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: இந்து மதம் குறித்து சர்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதபோதகர் எங்கு, எப்போது பேசினார் என்பது குறித்த விவரத்தை தெரிவிக்க ஐகோர்ட் கிளை  உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியை சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் இந்து மதம் குறித்தும், கோயில்கள் குறித்தும் விமர்சித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில்  ேபசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த இந்து அமைப்பினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்நிலையில், மோகன் சி லாசரஸ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்த விவகாரம் ெதாடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு போலீசார் என் மீது பல்வேறு  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான், தவறான நோக்கத்தில் யாரையும் விமர்சித்து பேசவில்லை. எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘குறிப்பிட்ட சம்பவம் கடந்த 18.3.14ல் சென்னையில் குறிப்பிட்ட  பிரிவினரிடையே உள்அரங்கில் நடந்தது. கடந்த செப். 23ல் மதுைரயில் பேசியதாக  சேலம் செவ்வாய்பேட்டை ேபாலீசார்  வழக்கு பதிந்துள்ளனர். கோட்டாறு போலீசாரின் வழக்கில், எங்கு  பேசினார், எப்போது பேசினார், எந்த ஊரில் பேசினார் என்ற விபரம் இல்லை. இதுவரை தமிழகத்தில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த செப். 23ல் மனுதாரர் இந்தியாவிலேயே  இல்லை. வெளிநாட்டில் இருந்தார்,’’ என தெரிவிக்கப்பட்டது .இதையடுத்து, எந்த ஊரில், எங்கு, எப்போது பேசினார் என்ற விபரத்தை அரசு தரப்பில் தாக்கல் செய்ய  உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாமென கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cleric ,Christian , When,Christian, talk , Hindu religion?
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்