சேலம் அருகே அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக கூட்டுறவு சங்க கேஷியர் தற்கொலை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி செக்கானூரை சேர்ந்தவர் ராஜசேகர்(42). திருமணமாகாதவர். அதேபகுதியில் உள்ள தோளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக (கேசியர்) பணியாற்றி வந்தார். நேற்று காலை வங்கி ஊழியர்கள், வளாகத்திலுள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான உரக்குடோனை திறந்து பார்த்தனர். அப்போது, அங்கு ராஜசேகர் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலின்பேரில் வந்த ஓமலூர் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் வங்கிக்கு விடுமுறையாக இருந்தபோதும் ராஜசேகர் வங்கிக்கு வந்து, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ராஜசேகர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில்,அவர் கூறியிருப்பதாவது: எனது சாவுக்கு கடன் சுமையும், பணிச்சுமையுமே காரணம். முதலில் என் தம்பி மூலமாக கடன் வந்தது. நான் வேலை செய்யும் இடம், 2002ம் ஆண்டு பதவி உயர்வு வழங்கியதில் சங்கத்தின் தற்போதைய செயலாளர் செய்த தவறு என்னை மிகப்பெரிய அளவு பாதித்தது. அப்போது இருந்த தனி அலுவலர், என்னை மிரட்டி பணிய வைத்தார். எந்தவொரு அதிகாரியிடமும் எனது கோரிக்கை எடுபடவில்லை.

21 வருடமாக, இன்று வரை பல லட்சம், லஞ்சம் கொடுத்து கொடுத்து நாசமாக போனேன். சங்க செயலாளர், எழுத்தர் ஆகிய 2 பேருக்கும் ஐநெட் சான்று போடுவதுதான் முக்கிய வேலை. அதில் வரும் வருமானத்தை திருடி பங்கு போடுவதுதான் வேலை. ஒரு காலத்தில் நியாயமான காரணத்திற்காக வாங்கிய கடன், அந்த கடனுக்கு வட்டி கட்ட கடன் வாங்குவதே முழுநேர பணியாகி விட்டது. எனது இந்த நிலைக்கு முழு காரணம் என் குடும்பம் மற்றும் நான் வேலை செய்யும் தோளூர் வங்கியும் தான். எனது தம்பி என்னை கடன்காரனாக மாற்றினார். கூட்டுறவு வங்கி செயலாளருக்கு நல்லா உழைப்பவனை,நல்ல பெயர் எடுப்பவனை பிடிக்காது. செயலாளருக்கு, எனக்கு வரும் பணப்பலனை வைத்து எனக்கு இருக்கும் கடனை அடைத்து விடவும். மேற்கண்டவாறு எழுதியிருந்தது. கடிதத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கேசியர், சங்க செயலாளர், தனி அலுவலர், எழுத்தர் ஆகியோரது ெபயரையும் கடிதத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More