×

ஈழத் தமிழர்களுக்கு பாஜகவும், அதிமுகவும் கூட்டாக சேர்ந்து துரோகம் செய்து வருகிறது: திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெரும் என்பதற்கு கட்டியம் கூறுகிறது என .ஸ்டாலின் பேசியுள்ளார். மதசார்பற்ற கூட்டணியில் வேட்பாளர்களை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என .ஸ்டாலின் கூறியுள்ளார். கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி,செய்யாறு,வந்தவாசி வேட்பாளர்களை ஆதரித்து மு.க..ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். திமுக மற்றும் தோழமைக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடித் தர வேண்டும் என .ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்,  ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி போளூரில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்று திமுக தலைவர் தேர்தல் பரப்புரை செய்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னரே ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் சேர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முக்கியத்துவம் அளித்துவருகின்றனர். ஜெயலலிதா எப்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஒதுக்கி வைத்தாரோ, அப்படி மக்களும் ஒதுக்கி வைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் திருவண்ணாமலை தொகுதியில் செய்யப்படவுள்ள நலத்திட்டங்களை சுட்டிக் காட்டி ஸ்டாலின் பரப்புரை செய்துள்ளார். திமுக இந்துக்களுக்கு விரோதி என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இந்தியில் வெளியிட்டனர். இந்தி திணிப்பை பழனிசாமி ஆட்சி மூலம் தமிழகத்தில் புகுத்திடலாம் என பாஜக முயற்சித்து வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியை வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை, திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம் என ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப் போவதில்லை, ஆனால் அதே நேரத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக் கூடாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு பாஜகவும், அதிமுகவும் கூட்டாக சேர்ந்து துரோகம் செய்து வருவதாக ஸ்டாலின் தெரிவித்தார். ஐ.நா.சபையில் இலங்கை போர்க்குற்றம் குறித்து 6 நாடுகள் கொண்டு வந்த தீர்மான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது பற்றி விமர்சனம் செய்துள்ளார். …

The post ஈழத் தமிழர்களுக்கு பாஜகவும், அதிமுகவும் கூட்டாக சேர்ந்து துரோகம் செய்து வருகிறது: திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Bajak ,Mukka ,Thiruvannamalai ,G.K. Stalin ,Tiruvandamalai ,President ,Dazhagam alliance ,Bajaka ,Eilad- ,B.J. G.K. Stalin ,
× RELATED விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்...