×

கல்வி கவுன்சிலில் பேச வாய்ப்பு மறுப்பு ஜேஎன்யூ துணைவேந்தருக்கு கண்டனம்: ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் பல்கலை கழகத்தின் 157வது கல்வி கவுன்சில் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வந்த பின், பொறுப்பு துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரின் ஏதேச்சதிகாரத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி அறிக்கை ஒன்றை ஜேஎன்யுடிஏ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கல்வி கவுன்சில் குழு கூட்டத்தில் தேர்ந்தெடுத்து சிலரை மட்டுமே பேச அனுமதி தரப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் டீன்கள், சேர்பர்சன்ஸ் ஆகியோரது கருத்துக்களை கூற வாய்ப்பளிக்காமல் வேண்டுமென்றே நிரகரித்தார். அதோடு, பேச விருப்பம் தெரிவித்து கைகளை உயர்த்தாத சிலரை குறிப்பிட்டு அழைத்து பேச வைத்ததும் அரங்கேறியது. அகடமிக் காலண்டர் குறித்து எவ்வித விவாதமும் கூட்டத்தில் நடத்தப்படவில்லை. துணைவேந்தரின் இந்த எதேச்சாரிகார போக்கு கண்டனத்துக்குரியது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கூட்டத்தில் விவாதிக்க மறுத்தது மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அறிக்கையில் கேள்வி எழுப்பி ஜேஎன்யுடிஏ துண வேந்தருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.ஜேஎன்யு நிர்வாகம் எதிர்ப்புஜேஎன்யு பதிவாளர் அனிர்பன் சக்ரபர்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அகடமிக் கவுன்சில் கூட்டம் நல்லவிதமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. ஆனால், சில ஆசிரிய உறுப்பினர்கள் கல்வி சபைக்  கூட்டத்தின் நடத்தை மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  அவதூறு பரப்புவதன் மூலம் ஜேஎன்யுவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். கூட்டம் நடைபெற்ற இரண்டரை மணி நேரத்தில், உதவி பேராசிரியர்கள் முதல் மூத்த பேராசிரியர்கள்  மற்றும் பள்ளிகளின் டீன்கள் வரை ஏராளமான குழு உறுப்பினர்கள், விவாதங்களில் மிகவும் ஜனநாயக மற்றும் உற்சாகமான முறையில் பங்கேற்றனர். அதன்பின்னரே ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கல்வி கவுன்சிலில் பேச வாய்ப்பு மறுப்பு ஜேஎன்யூ துணைவேந்தருக்கு கண்டனம்: ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை appeared first on Dinakaran.

Tags : JNU ,Union ,New Delhi ,157th Academic ,Council ,Advisory Committee ,Delhi Jawaharlal University ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை