ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர்கள் நேற்று ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர். குவாட்ரபுள் ஸ்கல்ஸ் (நால்வர்) பிரிவில் இந்தியாவின் சவரன் சிங், தத்து பாபன், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அணி அபாரமாக செயல்பட்டு பந்தய தூரத்தை 6 நிமிடம், 17.13 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தது. ஆசிய விளையாட்டு துடுப்பு படகு பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமாக இது அமைந்தது. இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் அனைவருமே ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குவாட்ரபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தோனேசியா அணி 2வது இடம் பிடித்து (6:20.58) வெள்ளிப் பதக்கமும், 3வதாக வந்த தாய்லாந்து அணி (6:22.41) வெண்கலமும் வென்றது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
