சேலம்: சேலம் கண்ணங்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டெருமையை விரட்ட வனத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். ஏற்காடு அடிவாரமான கண்ணங்குறிச்சி பகுதியில் அதிக அளவிலான விவசாய நிலங்கள் இருக்கின்றன. ஏற்காடு வனப்பகுதியிலிருந்து காட்டெருமை, மான், காட்டுப் பன்றி, முயல், கரடி உள்ளிட்ட விலங்குகள் மலை அடிவாரப் பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வருவது வழக்கம். இதனை தொடர்ந்து மூக்கனேரி பகுதியில் சுமார் 11 மணி அளவில் காட்டெருமை ஒன்று நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது.
இதனையடுத்து வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல்கள் அளிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மூக்கனேரியில் ஒரு விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது. குறிப்பாக வனத்துறையினர் வாகனத்தை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பொக்லைன் இயந்திரம் கொண்டு அந்த விலங்கை விரட்டும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
