×

ஊரக திறனாய்வு தேர்வு கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி

சாத்தான்குளம் : ஊரக திறனாய்வு தேர்வு கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக ஆண்டு தோறும் திறனறித்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஊரகத்திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு நடந்த தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மாலதி, பூவைசலேட்ஜெஸிந்தா, மாணவர்கள் ஆகாஷ், நிதிஷ்காத்திகேயன் ஆகிய நான்கு பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் வரை ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவ ,மாணவிகளையும் சிறப்பாக பயிற்சி அளித்த கணித பட்டதாரி ஆசிரியை தயாவதி ரோஜா புஷ்பம்  ஆகியோரை தலைமை ஆசிரியை ஷிபாசினி அமுதா பாராட்டி பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். …

The post ஊரக திறனாய்வு தேர்வு கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kommatikottai Government School ,Chatankulam ,Test ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து