×

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி

சென்னை: கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், அழகிரி மற்றும் தமிழரசு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். முரசொலி செல்வம், அமிர்தம், கனிமொழி குடும்பத்தினரும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். கலாநிதி மாறன், தயாநிதி மாறன் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர். கலைஞரின் பேரன், பேத்திகளும் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 25-ம் தேதி உடல் நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் ரத்த அழுத்த காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 7 ம் தேதி  மாலை 6.10 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த பின்னர் ராஜாஜி அரங்கில் நேற்று மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை கலைஞர் குடும்பத்தினர் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Family,kalaignar Karunanidhi
× RELATED சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23...