×

ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடாக மாறிய ஏரி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரியில் தொழிற்சாலை சிமெண்ட் ஷீட்டுகள், குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரி 10 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்த லாலாப்பேட்டை ஏரியில் சில விஷமிகள் லாலாப்பேட்டை, சிப்காட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து அகற்றும் சிமெண்ட் ஷீட்டுகளை கொண்டு வந்து குவியல் குவியலாக மலைபோல் கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் தொழிற்சாலைகளில் தினசரி அள்ளும் குப்பைகளையும் இந்த ஏரியில் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் இந்த குப்பைகளை தீ வைத்துவிட்டும் செல்கின்றனர். இதனால் ஏரியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரமான இந்த ஏரியில் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என லாலாபேட்டை, எடப்பாளையம், வானாபாடி உள்பட பல்வேறு கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடாக மாறிய ஏரி appeared first on Dinakaran.

Tags : Lalapet ,Ranippe ,Ranipetta ,Lalapette ,Ranipet ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று...