×

லால்குடி தொகுதி சமக வேட்பாளர் தி.மு.க.வில் இணைந்தார்

திருச்சி: லால்குடி சட்டமன்ற தொகுதி சமக வேட்பாளர் முரளிகிருஷ்ணன் திமுகவில் நேற்று இணைந்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 தொகுதிகளை சரத்குமார், கமலிடமே சரண்டர் செய்தார். கடந்த 20ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது நெல்லை தொகுதி சமக வேட்பாளர் அழகேசன் மனு தள்ளுபடியானது. இந்தநிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி சமக வேட்பாளர் முரளிகிருஷ்ணன், கட்சியை விட்டு விலகி திமுக முதன்மை செயலாளர் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு முன் நேற்று தி.மு.க.வில் இணைந்தார்….

The post லால்குடி தொகுதி சமக வேட்பாளர் தி.மு.க.வில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Samag ,Lalgudi ,DMK ,Lalgudi Assembly Constituency ,Muralikrishnan ,Kamal Haasan ,Tamil ,Nadu assembly election ,Lalgudi Constituency ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே நந்தியாற்று வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு!!