×

துளசியின் மருத்துவ குணங்கள்

துளசி ஒரு மூலிகைச் செடியாகும். இதன் அனைத்துப் பாகங்களிலும் மருத்துவக்குணம்  இருக்கும். கோயில்களில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது. வடிகால் வசதியுள்ள குறுமண், செம்மண், வண்டல்மண், களிகலந்த மணற்பாங்கான மண் போன்றவற்றில் நன்கு வளரும். கற்பூரமணம் பொருந்திய இலைகளையும், கதிராக வளர்ந்த பூங்கொத்துக்களையும் கொண்டிருக்கும். துளசியை விதை மற்றும் இளம் தண்டு குச்சிகள் மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம். சளி,இருமல்,வறட்டு இருமல் போன்வற்றிற்கு மருந்தாக விளங்குகிறது. தொற்றுநோயை எதிர்க்கும். ஜீரணசக்தியை அதிகரித்து பசியை தூண்டும். வயிற்றுப்பொருமலைத் தணிக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். மாதவிடாயின் முறையான சுழற்சிக்கும் பயன்படுத்தலாம்.

துளசியின் மருத்துவக்குணங்கள் ஏராளம். வீடுகளில் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையானது இது. அவரவர் வசதிக்கேற்ப சிறியதொட்டிகளில்கூட இவற்றை வளர்க்கலாம். துளசிச்செடியை தினமும் உட்கொண்டால் குடல், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும். உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகினால் நீரிழிவு வியாதி வராது. வியர்வை நாற்றத்தைப் போக்க குளிக்கும்நீரில் முந்தையநாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பலநாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் நீக்கும் தன்மை இதற்குண்டு. துளசிஇலையை எலுமிச்சை சாறுவிட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதை தோலில் தடவினால் படை, சொரி மறையும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Basil, medicine, qualities
× RELATED 17 மாநிலங்களில் தாய்க்குலங்களே...