×

திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் சிஏஏவை அனுமதிக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக ஆட்சி அமைந்தவுடன் சிஏஏவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்ேடாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் கே.பி. சங்கர், ராயபுரம் வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, ஆர்கே நகர் வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர், துறைமுகம் வேட்பாளர் பி.கே. சேகர்பாபு, மாதவரம் வேட்பாளர் எஸ்.சுதர்சனம், பெரம்பூர் வேட்பாளர் ஆர்.டி.சேகர், திருவிக நகர் வேட்பாளர் தாயகம் கவி மற்றும் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் பரந்தாமன் ஆகியோரை ஆதரித்து ராயபுரம் மேற்கு மாதா கோவில் சாலையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குடியுரிமை சட்டத்தை பாஜ அரசு கொண்டு வந்த போது முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தோம். இந்நிலையில் ெகாரோனா தொற்று வேகமாக பரவியதால் நேரடியாக வந்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினேன். இப்போதும் கூறுகிறேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம். தமிழகத்தில் சிஏஏவை நுழைய விடமாட்டோம். எப்படி கேரளா, மேற்குவங்காளத்தில் உள்ள முதல்வர்கள் எப்படி அனுமதிக்க வில்லையோ. அதை போன்று தமிழகத்தில் நமது திமுக ஆட்சி வந்தவுடன் அனுமதிக்காது.இப்போது இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நாடகம் ஆடுகிறார். அப்போது போராட்டம் நடத்தியவர்களை ஒருநாள் போய் பார்த்தீர்களா, போராட்டத்தை நிறுத்துங்கள் என்று கூறினீர்களா. அதிமுகவை சேர்ந்த 11 எம்பிக்கள், அன்புமணி உட்பட ஆதரித்து ஓட்டு போட்டவர்கள், இப்போது கூட்டணி வேறு வைத்துள்ளீர்கள். அதை வெளியே சொல்வதற்கு கூச்சப்படுகிறீர்கள். அதை மறைத்துவிட்டால் மக்கள் நம்பிவிடுவார்களா பாஜவுடன், அதிமுக கூட்டணி இல்லை என்று நம்பிவிடுவார்களா. அடிமை ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பட்டியல் போட்டு கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார். மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்த்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்ததால் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்க்கிறோம். மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பேசினாரா. தமிழகத்தில் பாஜ ஜெயிக்க முடியாது என்பது வரலாறு. ஆனால் தற்போது அதிமுக ஜெயித்தால் அது அதிமுக வெற்றியாக இருக்காது, பாஜவின் வெற்றியாகவே தான் இருக்கும்.  எனவே அவர்கள் வெற்றி பெற கூடாது. மத வெறியை தூண்டுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இது திராவிட மண், பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண். எனவே உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு எடுபடாது. நானும் வேட்பாளராக தான் நிற்கிறேன். அதுவும் முதல்வர் வேட்பாளராக, இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றால் தான் நான் வெற்றி பெறுவேன். எனவே எங்களை வெற்றி பெற வையுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.தூத்துக்குடி துப்பாக்கி சூடு; பச்சை படுகொலைதூத்துக்குடியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலைவர் கலைஞர் ஆட்சிப்  பொறுப்பில் இருந்தபோது செய்துள்ள மக்கள் நலத்திட்டங்களை நான் பட்டியலிடுகிறேன். இதுபோன்ற திட்டங்களை கூறி பழனிசாமியால் வாக்கு  கேட்க முடியுமா? சாதனைகளை சொல்ல முடியுமா? வேதனைகளைத் தான் கூற முடியும்.  இந்த தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றனர். காக்கை, குருவிகளை சுட்டுத் தள்ளுவது போன்று சுட்டுத்  தள்ளினர். அந்த கண்ணீர் இன்றும்  மறையவில்லை.  ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற அமைதி வழியில், அறவழியில், காந்திய  வழியில் மக்கள் போராடினர். அந்தப் போராட்டத்தில் 100 நாட்கள்  கடந்ததை அடுத்து 2018ம் ஆண்டு மே 22ம் தேதி கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக அமைதி வழியில் குடும்பம், குடும்பமாக ஊர்வலம் நடத்தினர்.அப்போது  இருந்த மாவட்ட கலெக்டர், கலெக்டர் அலுவலகத்திலிருந்து மனுவை  வாங்கியிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது. ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வராமல் வெளியூர் சென்று விட்டார். இதை பயன்படுத்திக் கொண்டு  திட்டமிட்டு மத்தியில் இருக்கும் பா.ஜ. அரசும், மாநிலத்தில் இருக்கும்  அதிமுக அரசும் பயங்கரமான துப்பாக்கிச்சூடு நடத்தியது. மத்தியில்  இருக்கும் பா.ஜ.வுடன் மாநிலத்தில் இருக்கும் அதிமுக இணைந்து கொண்டு நடத்திய  பச்சை படுகொலை தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம். இப்படி 13 பேரை கொலை செய்த  கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டாமா? பதில் தர வேண்டாமா? இப்படி பாவத்தை செய்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டாமா?  என்பதைத் தான் நான் கேட்கிறேன். …

The post திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் சிஏஏவை அனுமதிக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CAA ,Tamil Nadu ,Tsagam ,G.K. Stalin ,Chennai ,Madadam ,Dijagam ,President ,Muddham ,Progressive Alliance ,B.C. ,
× RELATED சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல்...