×

இன்று முதல் 31ம் தேதி வரை புறநகர் ரயில்கள் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில்  எளாவூர் கும்மிடிப்பூண்டி  இடையே இன்று  முதல் 31ம் தேதி வரை பராமரிப்பு   பணி  நடைபெறவுள்ளதால் 9 நாட்கள் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் வரும் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் வரும் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் வரும் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும். சூலூர்பேட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் மார்ச் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் வரும் 28 (ஞாயிற்றுக்கிழமை) கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் வரும் 28 (ஞாயிற்றுக்கிழமை) சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post இன்று முதல் 31ம் தேதி வரை புறநகர் ரயில்கள் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Suburban ,Southern Railway ,Chennai ,Elavoor Kummidipoondi ,Central – Gudur ,Dinakaran ,
× RELATED தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில்...