×

காற்றாலை இறக்கை நிறுவனத்தில் தீவிபத்து

சென்னை: திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி கிராமத்தில் தனியார் காற்றாலை இறக்கை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று காலை 8 மணியளவில் ரசாயன குடோன் அருகே உள்ள கழிவு பொருட்கள் கொட்டும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து நிறுவனத்தில் இருந்து வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post காற்றாலை இறக்கை நிறுவனத்தில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Fire ,Wind Wing Company ,CHENNAI ,Geezachery ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்