×

அமைச்சருக்கு ரூ.100 கோடி மாமூல் வசூல் விவகாரம் : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா? சிவசேனா மூத்த தலைவர் ஆவேசம்

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் நின்ற விவகாரத்தில், காரின் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தார். குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாசை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. தொடர்ந்து மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே, பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எழுதிய 8 பக்க கடிதத்தில், ‘மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பை நடன விடுதி, மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு எனக்கு உத்தரவிட்டார். நான் மறுத்ததால், கீழ்நிலை அதிகாரிகள் மூலம் பணம் வசூலித்தார். வெடிகுண்டு கார் விவரத்தை என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த கடிதம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் முதல்வராக உள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவையில் உள்ள உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது புகார் தெரிவிக்கப்பட்டதால், கூட்டணிக்குள் பிரிவு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதமேலும், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் கூறுகையில், ‘அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று சரத்பவார் கூறியதில் என்ன தவறு உள்ளது?. யார் வேண்டுமானாலும் எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கலாம். மத்திய விசாரணை முகமைகளை தவறுதலாக பயன்படுத்தி மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவர யாரேனும் முயற்சித்தால், அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் நீங்களாகவே அந்த தீயில் எரிந்துவிடுவீர்கள்’ என்றார்….

The post அமைச்சருக்கு ரூ.100 கோடி மாமூல் வசூல் விவகாரம் : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா? சிவசேனா மூத்த தலைவர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Shiv Sena ,Mumbai ,Mukesh Ambani ,Mumbai, Maharashtra ,Awesam ,
× RELATED மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து!!