×

எடப்பாடி பொய் பிரசாரம் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் சாத்தியமே இல்லை: மின்ஊழியர் மத்திய அமைப்பு குற்றச்சாட்டு

பெரம்பலூர்: தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் பெரம்பலூரில் அளித்த பேட்டி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுமென வாக்குறுதி அளித்துள்ளார். இது விவசாயிகளையும் , மக்களையும் ஏமாற்றக்கூடிய அறிவிப்பாகும். தமிழக மின்சார வாரியத்தில் அதற்கான போதுமான மின் உற்பத்தியோ, துணை மின்நிலையங்களோ போதுமானதாக இல்லை. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய மின் உற்பத்தி நிலையங்களே தொடங்கப்படவில்லை.  ஏற்கனவே தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் இருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்படி 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை வழங்க முடியும். மின்சார வாரியத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்து வருகிறது. இதற்கு அதிமுக அரசும் ஆதரவளித்து வருகிறது. இப்படிப்பட்ட தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கையாளும் பாஜக, அதிமுக அரசுகளை தேர்தலில் தோற்கடிப்போம் என்றார். …

The post எடப்பாடி பொய் பிரசாரம் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் சாத்தியமே இல்லை: மின்ஊழியர் மத்திய அமைப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Edabadi ,Electrician Central Organisation ,Perambalur ,Augustine Perambalur ,Secretary of State ,Tamil Nadu ,Chief Minister ,Edappadi Palanisamy ,Federal Organization of Electricitors Accused ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி