×

பணிநிறைவு பாராட்டு விழா

காஞ்சிபுரம்: தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட இணை செயலாளரும், புன்னப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளருமான நாகப்பன்  பணிநிறைவு பாராட்டு விழா நேற்று முன்தினம் புன்னப்பட்டு அரசு  ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் டில்லிபாய் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சத்துணவு அமைப்பாளர் நாகப்பன் பணிக்காலத்திய செயல்பாடுகள், அமைப்பு ரீதியாக சக ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் முன்னின்று குரல் கொடுக்கும்  திறன் குறித்து பாராட்டிப் பேசினர்.  இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை கோமதி, ஷீபா வெங்கட்ராம், ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் உமாபதி, மோகன்தாஸ், வெங்கடேச பெருமாள், கணேசன், உலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பணி  ஓய்வுபெறும் நாகப்பன் ஏற்புரை நிகழ்த்தினார்….

The post பணிநிறைவு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Shredding Appreciation Festival ,Kanchipuram ,Tamil Nadu ,Nadu Nutrition Staff Union District ,Co-Secretary ,Smilapatti Government ,Primary School Nutrition ,Nagappan Shuttishi ,Closing Appreciation Festival ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு...