×

கந்தர்வக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.5.91 கோடி தங்க நகைகள் சிக்கியது: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

கறம்பக்குடி: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தச்சன்குருச்சி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் நகைகள் இருந்தது. இதனால் காரை இயக்கி வந்த மோகன் மற்றும் மற்றொரு நபரிடம் விசாரித்தனர். அப்போது சேலத்தில் உள்ள பட்டறையில் இருந்து நகைகள் செய்து விற்பனைக்காக புதுக்கோட்டை, பட்டுக்கோட்டைக்கு எடுத்து செல்வதாக கூறினர். மேலும் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதுதவிர, உரிய ஆவணங்களின்றி ரூ.5.91 கோடி மதிப்பிலான நகைகள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.5.91 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர்.  இதேபோல், அரியலூர் அருகே தனியார் வங்கிக்கு உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 1.5 கோடி பறிமுதல் செய்தனர்….

The post கந்தர்வக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.5.91 கோடி தங்க நகைகள் சிக்கியது: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Gandharvakkottai ,Squad ,Karambakudi ,Tamil ,Nadu assembly elections ,Pudukottai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு பத்திரமாக மீட்பு