×

அடிப்படை வசதி செய்து தராததால் சாலைகளில் கருப்புக்கொடி கட்டி கீழக்காடு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு கீழக்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் சாலைகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்குகாடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதியின்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தனர். அப்போது வந்த அதிகாரிகள் தேர்தல் முடிந்தவுடன் பணிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்தும் இதுவரை ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி சாலைகளில் கருப்பு கொடியை பொதுமக்கள் கட்டியுள்ளனர். அப்போது தங்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்து கொடுத்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்….

The post அடிப்படை வசதி செய்து தராததால் சாலைகளில் கருப்புக்கொடி கட்டி கீழக்காடு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Keelkadu ,Vedaranyam ,Marudur ,South Keelkadu ,Dinakaran ,
× RELATED மருதூர் ஊராட்சியில் 2019 முதல் 2022 வரை...