×

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் இன்று பாடைகாவடி திருவிழா 28ம் தேதி புஷ்ப பல்லாக்கு

வலங்கைமான் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாரியம்மன் கோயிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு பாடை காவடி திருவிழாவிற்கான முதற்கட்ட பணியாககடந்த 5ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது 7ம் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் 14ம் தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும்நடைபெற்றன. இதையடுத்து அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பாடை காவடி திருவிழாஇன்று நடைபெறுகிறது.புஷ்ப பல்லக்கு விழா வரும் 28ம் தேதியும்,ஏப்ரல் மாதம் நான்காம் தேதி 4ம் ஞாயிறு திருவிழாவும் ஏப்ரல் 11ம் தேதி கடை ஞாயிறு திருவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்ரமேஷ் மற்றும் தக்கார் ரமணி மற்றும் அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில்திருவாரூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரதராஜம்பேட்டை தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பாடை காவடி திருவிழா மற்றும் புஷ்ப பல்லக்கு விழா ஆகியவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொள்வதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (21ம் தேதி) நடைபெறும் பாடை காவடி திருவிழா மற்றும் 28ம் தேதி நடைபெறும் புஷ்ப பல்லக்கு விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி இல்லை. இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே பாடை காவடி அலகு காவடி பால் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் இன்று பாடைகாவடி திருவிழா 28ம் தேதி புஷ்ப பல்லாக்கு appeared first on Dinakaran.

Tags : Pushpa Pallaku ,Padaikavadi festival ,Valankaiman Maharamariamman Temple ,Valangkaiman ,Mahamaryamman ,Temple ,Varadarajanbet street ,Thiruvarur district ,Valangkhaiman ,Valankaiman Maharamariamman ,Sadaikavadi Festival ,28th ,
× RELATED சவுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கு