×

வீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு தேர்தல் விதி மீறி கால்வாய் பணி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர மன்ற முன்னாள் தலைவர் ராசகுமார் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பொன்னையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ25 கோடிக்கு மேல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த கோயில் தனியார் அகோபில மடத்திற்கு சொந்தமானது. அரசின் நிதி அரசுக்கு சொந்தமான கோவில்களுக்கு தான் செலவு செய்ய வேண்டும். இதில் எந்த சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க, நான் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கடந்த ஆண்டே பஜார் வழியே வராமல் மாற்று வழியில் கொண்டு செல்ல நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். தொடர்ந்து, அவர்கள் திட்டமிட்ட பாதையில் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த பணி தேர்தல் தேதி அறிவித்த பிறகும் வேட்பாளர் அறிவித்த பிறகும் திருவள்ளூர் நகராட்சி 3வது வார்டு காமராஜர் சாலையில் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post வீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு தேர்தல் விதி மீறி கால்வாய் பணி appeared first on Dinakaran.

Tags : Veeraragawa Perumal ,Tiruvallur ,Tiruvallur City Council ,President ,Rasakumar ,District Collector ,District Election Officer ,Ponnaiah ,
× RELATED நீ மோர் பந்தல் திறப்பு வீரராகவ...