×

ஹால்மார்க் தங்க நகை விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: இந்திய தர நிர்ணய அமைப்பு சென்னை கிளை சார்பில் காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹால்மார்க் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்திய தர நிர்ணய அமைப்பு அலுவலர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர நகை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் மோகன்லால் வரவேற்றார். இந்திய தர நிர்ணய அமைப்பு இயக்குநர் பவானி, இணை இயக்குநர் ஜோஸ் சார்லஸ் ஆகியோர், தங்க நகைகளை தேர்வு செய்து வாங்குவது, அவற்றின் முத்திரைகள் குறித்து விளக்கமளித்தனர்.ஆபரண தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வமான முத்திரைதான் ஹால்மார்க். இது இந்திய தரநிர்ணய அமைப்பால் கடந்த 2000ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்க நகைகள் வாங்கும்போது ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே வாங்குவது, வாங்கும் தங்கத்தின் சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதில் 4 முத்திரைகள் இருக்கும். இதனைப் பார்த்து பொதுமக்கள் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்றனர். ராஜம் செட்டி நகைக்கடை உரிமயாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் நகர நகை வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் லட்சுமண குப்தா நன்றி கூறினார்….

The post ஹால்மார்க் தங்க நகை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Indian Standardization Organization ,Chennai ,Kanchipuram West Rajaveedee ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...