×

மேயர் தொடங்கி வைத்தார் பிளாஸ்டிக் இல்லா மார்க்கெட் வடக்கு டெல்லியில் பிரசாரம்

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் பிளாஸ்டிக் இல்லா மார்க்கெட் என்ற பிரசாரத்தை மேயர் ஜெய்பிரகாஷ் ேநற்று தொடங்கி வைத்தார்.டெல்லியில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளது. தற்ேபாது அதை மேம்படுத்துவதற்காக டெல்லி அரசு தனியாகவும், மாநகராட்சிகள் தனியாகவும் திட்டம் தீட்டி, செயல்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் இல்லா மார்க்கெட் என்ற புதிய பிரசாரத்தை வடக்கு டெல்லி மாநகராட்சியில் மேயர் ஜெய்பிரகாஷ் தொடங்கி வைத்தார். டெல்லி கேட் பகுதியில் உள்ள மகிளா ஹாட்டில் பிளாஸ்டிக் இல்லா மார்க்கெட் பிரசாரம் 2021 என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு தொடங்கி வைக்கப்பட்டது. அதே சமயம் சதார்பகர்கஞ்ச் மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டது. அதன்படி பொதுமக்களுக்கு சணல் பை அல்லது துணிப்பை வழங்கப்படும். அவர்கள் பதிலுக்கு 1 கிலோ பிளாஸ்டிக்கை கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இந்த பிரசாரம் தொடர்பாக மேயர் ஜெய்பிரகாஷ் கூறும்போது,’ பிளாஸ்டிக் இல்லா மார்க்கெட் பிரசாரத்தின் மூலம் டெல்லி வீதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் குறைக்கப்படுவதுடன், குப்பைக்கிடங்கின் உயரமும் குறைக்கப்படும். மறுசுழற்சி பொருட்களை தற்போது வடக்கு டெல்லி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்லி நகரம் சுத்தமாக்கப்படும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் செய்வது தவிர்க்கப்படும். கழிவுப்பொருட்களால் தயார் செய்யப்பட்ட கண்காட்சியை டெல்லி பள்ளி மாணவர்கள் நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற விழிப்புணர்வு மூலம் தான் நாம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தவிர்க்க முடியும். இந்த விழிப்புணர்வு பிரசாரம் டெல்லியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post மேயர் தொடங்கி வைத்தார் பிளாஸ்டிக் இல்லா மார்க்கெட் வடக்கு டெல்லியில் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Mayor ,North Delhi ,New Delhi ,Jaiprakash ,Delhi ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி