×

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி மலைக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதியில் உள்ள வெள்ளகெவி ஊராட்சி பகுதியான பெரியூர், சின்னூர் ஆகிய மலைக்கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்ல, பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை அணைப்பகுதிக்கு மேல் 13 கி.மீ நடந்து செல்ல வேண்டும். சாலை வசதி இல்லாததால், அரசின் இலவச அரிசியை ரூ.1000 செலவழித்து கொண்டு செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், எந்த வித அடிப்படை வசதியும் இல்லை என தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி, பெரியகுளத்தை அடுத்த கல்லாறு வாச்சீங் டவர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெரியூர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் 12 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்….

The post சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி மலைக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Malaigirama ,Periyakulam ,Periyur ,Chinnur ,Vallakevi Padrashi ,Dintugul, Palani ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி...