×

தனியாக நடந்து சென்ற பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை: முதியவர் கைது

அண்ணாநகர்: பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சுமதி (54, பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை அண்ணாநகர் நியூ மண்டபம் ரோடு வழியாக நடந்துசென்றார். அப்போது, போதையில் வந்த முதியவர் ஒருவர், அவரிடம் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கை காண்பித்துள்ளார். முதியவர்தானே என்று அந்த பெண் கண்டுகொள்ளலாம் சென்றுள்ளார். அப்போது, திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், முதியவரை பிடித்து தள்ளிவிட்டுவிட்டு வேகமாக சென்றுள்ளார். இதன்பிறகு அந்த முதியவர், அங்கு கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.இதில், படுகாயமடைந்த அந்த பெண் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், டி.பி சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்த கரிகாலன் (62) என்பதும், இவர் அமைந்தகரை திரு.வி.க.நகர் பூங்கா அருகே உள்ளே மாநகராட்சி 8 மண்டல அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு ஆதார்,  வாக்காளர் அடையாள அட்டை, திருமண சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பம் எழுதி கொடுக்கும் வேலை  செய்து வந்ததும், போதையில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post தனியாக நடந்து சென்ற பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை: முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Ayanawaram ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்