×

சாத்தான்குளம் அருகே வேகத்தடை கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சாத்தான்குளம் : சாத்தான்குளம்  ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேல நடுவக்குறிச்சி பகுதியில்  திசையன்விளை, நடுவக்குறிச்சி,  நல்லூர் செல்லும் சாலை உள்ளது. இதில்  நல்லூர் விலக்கு பகுதியில்  அடிக்கடி விபத்து நடந்து வந்தது. இதனால் அதே  பகுதி மக்கள் வேகதடை அமைக்க வேண்டும் என வலியறுத்தி வந்தனர். ஆனால்  அமைக்கப்படவில்லை.  இதனால் விபத்து எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால்  ஆத்திரமடைந்த நடுவக்குறிச்சி காலனி மக்கள் நல்லூர் விலக்கு பகுதியில்  வேகத்தடை அமைக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. தகவலறிந்து தட்டார்மடம்  இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையில் விரைந்துவந்த  எஸ்.ஐ ஐயப்பன்  மற்றும் போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை  நடத்தினர். இதில் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது. தேர்தல்  நன்னடத்தை விதிமுறைகள் உள்ளதால் எந்தவிதப் போராட்டத்துக்கும் அனுமதியில்லை.  வேகத்தடை அமைக்க சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து வலியுறுத்த வேண்டும். தேர்தல் முடிந்ததும் இதில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைதுறையினருக்கு  பரிந்துரைக்கப்படும் எனக்கூறி  சமாதானப்படுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச்  சென்றனர். இருப்பினும் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது….

The post சாத்தான்குளம் அருகே வேகத்தடை கோரி கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Nadrakkulam, Nadrakkurichi ,Nallur ,Satankulam Union Nadukkurichi ,Dinakaran ,