×

தொகுதி ரவுண்ட்-அப்-‘அதிமுக எம்எல்ஏவை காணோமுங்க… அவரைக் கண்டால் வரச்சொல்லுங்க…’

*தெற்கு தொகுதி மக்கள் கொந்தளிப்பு*திமுக கூட்டணிக்கு பிரகாச வாய்ப்புமதுரை தெற்கு தொகுதி சிட்டிங் அதிமுக எம்எல்ஏ தொகுதிக்காக எதையும் செய்யாததால் ஆத்திரத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதன்மூலம் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியான மதிமுகவும் – அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. மதுரை மாநகராட்சியில் 24 வார்டுகளை கொண்ட இத்தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பெண் வாக்காளர் அதிகம்…இத்தொகுதியில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சரவணன், திமுகவில் பாலச்சந்திரன், மக்கள் நல கூட்டணி சார்பில் மதிமுகவில் பூமிநாதன், பாஜவில் மகாலட்சுமி போட்டியிட்டனர். இதில், அதிமுகவை சேர்ந்த சரவணன் வெற்றி பெற்றார். 2வது இடத்தில் திமுக பாலச்சந்திரன், 3வது இடத்தில் மதிமுக பூமிநாதன் இருந்தனர். பாஜ வேட்பாளர் மகாலட்சுமி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த தேர்தலில் தெற்கு தோகுதியில் 1,10,615 ஆண்கள், 1,13,990 பெண்கள், இதர 20 பேர் என 2,24,625 வாக்காளர்கள் இருக்கின்றனர். இத்தொகுதி பெண் வாக்காளர்களை அதிகம் கொண்டதாக இருக்கிறது.நெசவாளர்கள் கொதிப்பு…கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரவணன், தொகுதிக்கு  குடிநீர், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட எந்த பிரச்னைகளையும் தீர்க்கவில்லை. தற்போது மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்கியுள்ளார். கடந்த தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால், அதில் எதையும் பூர்த்தி செய்யவில்லை. மேலும் நெசவாளர்களுக்கு குறைந்த விலையில் பாவு நூல் வாங்கி கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்த அவர், வெற்றிக்கு பின்னர் அவர்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் நெசவாளர்கள் கொதிப்பில் உள்ளனர்.‘மாற்றம்’ தேடி…ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை கரை ஓரம் விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அங்கு குடியிருந்தவர்களை காலி செய்யக் கோரப்பட்டது. இவர்களுக்கு கட்டாயம் மாற்று வீடு வழங்குவதாக உறுதியளித்தார். அதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் தெற்கு தொகுதி வாக்காளர்கள் மாற்றத்தை நோக்கி உள்ளனர்.சுற்றுகிறார் ‘பூமி…’இம்முறை தேர்தலில் திமுக கூட்டணியான மதிமுக சார்பில் பூமிநாதன், அதிமுக சரவணன், அமமுகவில் ராஜலிங்கம் களத்தில் உள்ளனர். 2016ம் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் தீர்க்கப்படாமல் உள்ளன. தொகுதியில் குடிநீர் பிரச்னை, நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், தொழில்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்பதை வலியுறுத்தி மதிமுக வேட்பாளர் பூமிநாதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தொழிலாளர்கள் ஆதரவு…ஏற்கனவே தெற்கு தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு பூமிநாதன் போட்டியிட்டதில், 52 தபால் ஓட்டுகளால் வெற்றி வாய்ப்பு இழந்தார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு 3வது இடத்தை பிடித்த அவர், தொடர்ந்து தெற்கு தொகுதி மக்களுடன் ஈடுபாட்டுடன் இருப்பதால் இம்முறை அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  மேலும் அப்பகுதியைச் பொதுமக்கள், அப்பளம், கடலை மிட்டாய், பாத்திர, சுமை தூக்குபவர்கள் என அனைத்து தரப்பு தொழிலாளர்களின் ஆதரவும் இவருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது.  தெற்கு தொகுதியில் கட்சிகள் போட்டிபோட்டு அலுவலகங்களைத் திறந்து, தொண்டர்கள் தலைமையில் பிரசாரங்கள்  வேகமடைந்துள்ளன. வேட்பாளர்கள் வலமும் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் தாண்டி  மதிமுக வெற்றிமுகம் காட்டுமென நம்பிக்கையும் பிறந்துள்ளது.‘‘அணி மாறுவதிலேயே குறியாக இருந்தது, தொகுதி மக்களை கண்டுகொள்ளாதது, அமைச்சர்கள் பின்னாலேயே சுற்றுவது என தன்னை ‘பிஸியாக’ வைத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாரே தவிர, தொகுதி மக்களை கண்டு கொள்ளவில்லை. இந்த முறை அவரை தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரச்சொல்லுங்க… ரொம்ப நாளாச்சு பார்த்து… 4 கேள்வியாச்சும் நறுக்குனு கேட்கணும்’’ என்கின்றனர் தெற்கு தொகுதி மக்கள்.‘வண்டிக்காரன் வேடத்தில் தப்பி வந்தேன் மன்னா…’ஜெயலலிதா இறந்ததும் அதிமுக எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் அணி பக்கம் தாவாமல் இருக்க கூவத்தூர் ரிசார்ட்ஸில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அந்த முகாமில் இருந்து மதுரை சரவணன் தப்பி வந்து, ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ‘முகாமில் இருந்து எப்படி தப்பி வந்தீர்கள்’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘மாறுவேடம் போட்டு அங்கிருந்து வந்தேன்’ என்றார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில், மன்னரிடம் ஒற்றன், ‘எதிரி நாட்டிலிருந்து வண்டிக்காரன் வேடத்தில் தப்பி வந்தேன் மன்னா’ என்பார். அதுபோல சரவணன், கூவத்தூரில் இருந்து தப்பி வந்ததாக வலைத்தளங்களில் மீம்ஸ் ஓடின. பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஓபிஎஸ் மீது அதிருப்தியடைந்து, எடப்பாடி அணிக்கு தாவினார்….

The post தொகுதி ரவுண்ட்-அப்-‘அதிமுக எம்எல்ஏவை காணோமுங்க… அவரைக் கண்டால் வரச்சொல்லுங்க…’ appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,South Constituency People Upheaval ,Prakasa Prasaka ,Madurai ,South Constituency ,DMK Alliance ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்